திரு வேங்கடத்து அந்தாதி 99/100 கருமம் களைய கண்ணனைக் கருதீரே !
திருமந்திரமில்லை சங்காழியில்லை திருமண்ணில்லை
தருமந்திரமொன்றுன்செய்தறியீர் செம்பொற்றானவனை
மருமந்திரங்கப்பிளந்தான் வடமலைவாரஞ்செல்வீர்
கருமந்திரண்டதை யெத்தாற்களையக்கருதீரே
பதவுரை : திரு + மந்திரம்
தருமம் + திரம்
மருமம் + திரங்க
கருமம் + திரண்டதை
திருமந்திரம் இல்லை அஷ்டாக்ஷர மகா மந்த்ரம் நாவில் இல்லை
சங்காழி இல்லை சங்கு சக்ர முத்திரை தோள்களில் இல்லை
திருமண் இல்லை திருமண் காப்பும் நெற்றியில் இல்லை
தருமம் திரம் சரணாகதி தருமத்தை நிலையாக
ஒன்றும் செய்து அறியீர் சிறிதும் செய்து பயிலவில்லை
செம்பொன் தானவனை சிவந்த பொன் நிறமுள்ள ஹிரண்யனை
மருமம் திரங்கப் பிறந்தான் மார்பு வருந்தப் பிளந்தவனான
வடமலை வாரம் செல்லீர் வேங்கட மலையின் அடிவாரம் கூட சென்றதில்லை
கருமம் திரண்டதை உங்கள் பாவங்கள் சேர்வதை
எத்தால் களையக் கருதீரே ? எப்படி நீக்க நினைக்கிறீர்கள் ?