Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 98/100 தீயனான எனக்கும&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 98/100 தீயனான எனக்கும&

    திரு வேங்கடத்து அந்தாதி 98/100 தீயனான எனக்கும் அருள்வது உன் கருணையே !

    அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வனருள் சிறிதும்
    அரும்பாதகன்னெஞ்சனாறாச்சினத்தனவாவினின்றுந்-
    திரும்பாதகன்மத்தனானேற்குச்சேடச்சிலம்பமர்ந்த-
    திரும்பாதகஞ்சம் தரில் அது காணுன்றிருவருளே



    பதவுரை :அரும் + பாதகன்
    அரும்பாத + கல்
    திரும்பாத +கன்மத்தன்
    அதிரும் + பாத + கஞ்சம்


    அரும் பாதகன் பொய்யன் அரிய பாவி , பொய் பேசுபவன்
    காமுகன் கள்வன் சிற்றின்பப் பிரியன் , திருடன்
    அருள் சிறிதும் அரும்பாத கல் நெஞ்சன் கருணை இல்லாத கல் போல் மனமுடையவன்
    ஆறாச்சினத்தன் தணியாத கோபம் உள்ளவன்
    அவாவில் நின்றும் திரும்பாத கன்மத்தன் ஆசையினின்று மீளாத காரியம் செய்பவன்
    ஆனேற்கு ஆகிய எனக்கு
    சேடச்சிலம்பு அமர்ந்து வேங்கட மலையில் இருக்கும்
    அதிரும் பாத கஞ்சம் தரில் தண்டை ஒலிக்கும் திருவடித் தாமரைகளைக் கொடுத்தால்
    அது உன் திருவருளே அது உன் கருணையாகும்
Working...
X