Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 96/100 வேங்கடவனைக் கா&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 96/100 வேங்கடவனைக் கா&

    திரு வேங்கடத்து அந்தாதி 96/100 வேங்கடவனைக் காணாமல் கடல் வளைகளை இழந்தது !


    பலகுவளைக்குள்சில கஞ்சம் போலும் படிவ அப்பன்

    நலகுவளைக்கு முன் உண்டான் நின் மாட்டும் நணுகிலனோ-
    உலகுவளைக்கும் கடலே ! நின் கண் முத்து உகுத்து இரங்கி
    இலகுவளைக்குலம் சிந்தி துஞ்சாய் இன்று இரா முற்றுமே

    பதவுரை : பல + குவளைக்குள்
    நல + கு +அளைக்கு + முன்
    உலகு + வளைக்கும்
    இலகு + வளை + குலம்


    உலகு வளைக்கும் கடலே உலகைச் சூழ்ந்த கடலே !
    நின்கண் முத்து உகுத்துஉன் கண்கள் முத்து போன்ற கண்ணீர் சிந்தி
    இரங்கி இலகு வளைக் குலம் சிந்தி புலம்பி கை வளைகளை கீழே நழுவ விட்டு
    இன்று இரா முற்றும் துஞ்சாய் இன்று இரவு முழுதும் தூங்க வில்லை (என்னைப் போலவே)
    பல குவளைக்குள் பல நீலமான குவளை மலர்கள் இடையே
    சில கஞ்சம் போலும் சில தாமரைகள் பூத்தது போல (கை கால்கள் உடைய)
    படிவ அப்பன் திரு மேனி உடைய ஸ்வாமியான
    அலைக்கு முன் நல கு உண்டான் வெண்ணெய்க்கு முன் நல்ல பூமியை விழுங்கிய
    நின்மாட்டும் உன்னிடத்திலும் (என்னைப் போலவே)
    செர்ந்திலனோ வரவில்லையா ?

Working...
X