திரு வேங்கடத்து அந்தாதி 95/100 நாரணன் நாமங்கள் நன்மையே நல்கும் !
துன்பங்களையுஞ்சனனங்களையுந்தொலைவறுபே-
ரின்பங்களையுங்கதிகளையுந்தருமெங்களப்பன்
றன்பங்களையும்படிமூவரை வைத்துத்தாரணியும்
பின்பங்களையுமிழுதுமுண்டானுடைப்பேர் பலவே
பதவுரை :துன்பம் + களையும்
இன்பங்களையும்
தன்+ பங்கு + அளையும்படி
பின்பு + அங்கு + அளையும்
![Click image for larger version
Name: image.jpg
Views: 1
Size: 120.5 KB
ID: 35034](filedata/fetch?id=35034&d=1645838665&type=thumb)

மூவரை பிரமன் சிவன் லக்ஷ்மி என்ற மூவரை
தன பங்கு அளையும்படி வைத்து தன மேனியில் பொருந்தும்படி வைத்து
அங்கு தாரணியும் அளையும் இழுதும் பூமியையும் தயிரையும் நெய்யையும்
உண்டான் எங்கள் அப்பனுடை விழுங்கிய திரு வேங்கடமுடையானுடைய
பேர் பல பல திருநாமங்கள்
துன்பம் களையும் வருத்தங்களை நீக்கும்
சனனம் களையும் பிறப்பை அழிக்கும்
தொலைவு அறு பேர் இன்பங்களையும் முடிவில்லாத மகிழ்ச்சியையும்
கதிகளையும் தரும் சிறந்த பதவிகளைக் கொடுக்கும்