Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 91/100 வேங்கடவா ! வருதĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 91/100 வேங்கடவா ! வருதĮ

    திரு வேங்கடத்து அந்தாதி 91/100 வேங்கடவா ! வருத்தாமல் வா !

    உள்ளமஞ்சாய்வலியாய் வலியார்க்கும் உபாயம் வல்லாய்
    கள்ளமஞ்சாயுதம் கைவரும் ஆயினும் கங்குலினில்
    வெள்ளமஞ்சார் பொழில்வேங்கடக்குன்றினில் வீழ் அருவிப்
    பள்ளமஞ்சாரல் வழிவரில் வாடும் இப்பாவையுமே





    பதவுரை : உள்ளம் + அஞ்சாய்
    கள்ளம் + அஞ்சு + ஆயுதம்
    வெள்ள + மஞ்சு + ஆர்
    பள்ளம் + அம + சாரல்

    உள்ளம் அஞ்சாய் மனம் அஞ்சாதவனே !
    வலியாய் வலிமை உடையவனே !
    வலியார்க்கும் உபாயம் வல்லாய் வலியவர்க்கும் உபாயம் கற்பிக்க வல்லவனே !
    கள்ளம் அஞ்சு ஆயுதம் கை வரும் களவிலும் பஞ்சாயுதங்களிலும் கை தேர்ந்தவனே !
    ஆயினும் கங்குலினில் ஆனாலும் இரவில்
    வெள்ள மஞ்சு ஆர் பொழில் வெள்ளமாய்ப் பொழிகின்ற மேகங்கள் தங்கும் சோலைகள் உடைய
    வேங்கடக் குன்றினில் திரு வேங்கட மலையில்
    வீழ அருவிப் பள்ளம் விழும் அருவி கொண்ட பள்ளங்கள் உடைய
    அம சாரல் வழி வரில் அழகிய மலை வழியாக நீ (கஷ்டப்பட்டு) வந்தால்
    இப்பாவையும் வாடும் இந்த பெண்ணும் வருந்துவள்
    Last edited by sridharv1946; 24-08-13, 20:45.
Working...
X