திரு வேங்கடத்து அந்தாதி 89/100 மீண்டும் மைந்தன் ஆகாமல் மாதவனை வணங்குங்கள் !
மாதிரங்காதல் மனை வாழ்க்கை என்று எண்ணி வான்பொருட்கு
மாதிரங்காதம் பல வளைவீர் ! இன்னும் மைந்தன் என்று ஓர்
மாதிரங்காதபடி வணங்கீர் !அறிமாவோடு கைம்-
மாதிரங்காதமர் செய்கின்ற சேட மலையினையே
பதவுரை : மா + திரம் + காதல்
மாதிரம் + காதம்
மாது + இரங்காதபடி
கைம்மா + திரங்காது
காதல் மனை வாழ்க்கை விரும்பும் மனைவியோடு இல் வாழ்க்கையை
மா திரம் என்றுஎண்ணி மிக்க நிலை உள்ளது என்று நினைத்து
வான் பொருட்கு நிறைய செல்வம் ஈட்டுவதற்காக
மாதிரம் காதம் பல வளைவீர் எல்லா திக்குகளிலும் அனேக காத தூரம் சுற்றுபவர்களே !
இன்னும் மைந்தன் என்று மீண்டும் உங்களைப் புத்திரன் என்று
ஓர் மாது இரங்காதபடி ஒரு தாய் அன்பு காட்டாதபடி
அரிமாவோடு கைம்மா திரங்காதுசிங்கங்களோடு யானை பின் வாங்காமல்
அமர் செய்கின்ற போர் செய்கின்ற
சேடமலையனையே வண்ங்கீர் வேங்கடவனை வணங்குங்கள்