Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 86/100 மறுக்கம் அறுக்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 86/100 மறுக்கம் அறுக்

    திரு வேங்கடத்து அந்தாதி 86/100 மறுக்கம் அறுக்க மறு கமலை அணி மார்பனைச் சேருவீர் !

    சேருமறுக்கமுனோயுமரணமுந்தீவினையின்
    வேருமறுக்கவிரும்பிநிற்பீர் வடவேங்கடத்தே
    வாருமறுக்கவறியாநெவரையும்வாழவருள்
    கூருமறுக்கமலையணிமார்பன் கைக்கோதண்டனே




    பதவுரை : சேரும் + மறுக்கமும்
    வேரும் + அறுக்க
    வாரும் + மறுக்க
    கூரும் + மறு + கமலை

    சேரும் மறுக்கமும் தன் வினையால் வரும் மனக் குழப்பங்களையும்
    நோயும் மரணமும் வியாதிகளையும் மரணத்தையும்
    தீவினையின் வேரும் கொடிய கருமத்தின் மூலத்தையும்
    அறுக்க விரும்பி நிற்பீர் ஒழிப்பதற்கு ஆசை கொண்டு நிற்பவர்களே !
    வட வேங்கடத்தே வாரும் திரு வேங்கட மலைக்கு வாருங்கள்
    மறு கமலை ஸ்ரீவத்ஸம் எனும் மறுவையும் திரு மகளையும்
    அணி மார்பன் மார்பில் உடையவனும் ,
    கை கோதண்டன் கோதண்டம் எனும் வில்லைக் கையில் உடையவனும்
    எவரையும் மறுக்க அறியான் எவரையும் விலக்க அறியாதவனையுமான திருமால்
    எவரையும் வாழ அருள் கூரும் அனைவரையும் வாழ கருணை புரிவான் !
Working...
X