Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 85/100 காந்தம் கவர் ஊச

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 85/100 காந்தம் கவர் ஊச

    திரு வேங்கடத்து அந்தாதி 85/100 காந்தம் கவர் ஊசி போல் ஸ்ரீகாந்தனை அடைவது எப்போது ?

    மாமனங்காந்தவல்வாய்ப்புள்ளையேவ மடித்துப் பித்த-
    னாமனங்காந்தவன்றோடவெய்தோனரும்பூங்கொடிக்குத்-
    தாமனங்காந்தன்ரிருவேங்கடத்தெந்தை தாள்களிலென்-
    றீமனங்காந்தங்கவரூசிபோலென்றுசேர்வதுவே



    பதவுரை : மாமன் + அங்காந்த
    பித்தன் + நா + மன் + அம் + காந்த
    தாமன் + அம் + காந்தன்
    தீ + மனம் + காந்தம்

    மாமன் மாமனான கம்சன்
    அங்காந்த வல் வாய் புள்ளை ஏவ திறந்த வாயுடன் வலிமை உடைய பகாசுரனை அனுப்ப
    மடித்து அதனைக் கொன்றவனும் ,
    பித்தன் நா மன் அம் காந்த ஓட சிவன் நாவிலுள்ள நீர் வற்றுமாறு ஓடும்படி
    அன்று எய்தோன் பாணாசுர யுத்தத்தில் அம்பு எய்தவனும் ,
    நறும் பூ கொடிக்கு வாசனை உள்ள தாமரையில் வாழும் திரு மகளுக்கு
    தாமன் அம் காந்தன் இருப்பிடமும் கணவனுமானவனுமான
    திரு வேங்கடத்து எந்தை திரு வேங்கட மலையில் இருக்கும் பெருமானுடைய
    தாள்களில் திருவடிகளில்
    என் தீ மனம் எனது கொடிய மனம்
    காந்தம் கவர் ஊசி போல் காந்தத்தால் இழுக்கப்பட்ட ஊசி போல்
    சேர்வது என்று அடைவது எப்போது ?
Working...
X