திரு வேங்கடத்து அந்தாதி 84/100 மதில் அரங்கன் மறு கூடு மருவாமல் வாழ்விப்பன் !
அறுகூடு கங்கை தரித்தான் அயன் அழைத்தாலும் இச்சை-
அறுகூடு மால் அடியார் அடிக்கே அப்பன் வேங்கடவன்
மறுகூடு மாதர் எறி பூண் எறிக்கும் மதில் அரங்கன்
மறுகூடு நம்மை மருவாமல் வாழ்விப்பன் - மாமனமே
பதவுரை : அறுகு + ஊடு(இடையே)
அறு + கூடு(சேர்)
மறுகு + ஊடு(பிணங்கும்)
மறு + கூடு(உடல்)
மா மனமே எனது மனமே !
அறுகு ஊடு கங்கை தரித்தான் அருகம் புல்லின் இடையே கங்கையை தரித்த சிவனும்
அயன் அழைத்தாலும் பிரமனும் தன்னிடத்திற்கு அழைத்தாலும் ,
இச்சை அறு அதில் விருப்பம் கொள்ளாதே !
மால் அடியார் அடிக்கே கூடு திருமால் அடியார் திருவடிகளில் சேர் !
ஊடு மாதர் எறி பூண் கணவனுடன் பிணங்கிய மனைவிகள் தெருவில் எறிந்த ஆபரணங்கள்
மறுகு எறிக்கும் மதில் அரங்கன் அங்கேயே பிரகாசிக்கும் மதில் சூழ்ந்த அரங்க நாதன் ஆன
அப்பன் வேங்கடவன் தலைவனான திருவேங்கடமுடையான்
மறு கூடு மருவாமல் மற்றோர் உடலில் சேராதபடி முக்தி தந்து
நம்மை வாழ்விப்பன் நம்மை வாழச் செய்வான் !