திரு வேங்கடத்து அந்தாதி 79/100 வேங்கடவா ! வினைகளை நீக்குவாய் !
குருகூரரங்க மறைத்தமிழ்மாலை குலாவும் தெய்வ-
முருகூரரங்கர் வடவேங்கடவர் முன்நீரிலங்கை
வருகூரரங்கம் துணித்தார் சரணங்கள் வல்வினைகட்கு
இருகூரரங்கள் கண்டீர் - உயிர்காள் - சென்று இரவுமினே
பதவுரை : குருகூரர் + அங்க
உருகு + ஊர் +அரங்கர்
வரு + கூரர் + அங்கம்
இரு + கூர் + அரங்கள்
உயிர்காள் உயிர்களே !
குருகூரர் அங்க மறை அங்கங்களை உடைய நம்மாழ்வார் அருளிய வேதங்களின்
தமிழ் மாலை குலாவும் தமிழ்ப் பாமாலைகளில் பொருந்திய
தெய்வ முருகு ஊர் அரங்கர் தெய்வ மணம் வீசும் ஸ்ரீ ரங்க நாதரும்
முன் நீர் இலங்கை வரு முன்காலத்தில் இலங்கையிலிருந்து வந்த
கூரர் அங்கம் துணித்தார் கொடியவர்களின் உடல்களைத் துணித்தவருமான
வட வேங்கடவர் சரணங்கள் வட மலையப்பனுடைய இரு திருவடிகள்
வல் வினைகட்கு வலிய இரு வினைகளையும் அறுப்பதற்கு
இரு கூர் அரங்கள் கண்டீர் இரு கூரிய வாட்கள் என அறியுங்கள்
சென்று இரவுமினோ சென்று வினைகளை அறுக்க அத்திருவடிகளைப் பிரார்த்தியுங்கள் !