திரு வேங்கடத்து அந்தாதி 75/100 வேங்கடவா ! தொண்டர் இனம் தலைப்பெய்தனன் !
மனந்தலை வாக்குறயெண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
இனந்தலைப்பெய்தனனீ தன்றியே இமையோரும் எங்கள்
தனந்தலைவா எனும் வேங்கடவாண தடங்கடலுள்
நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே
பதவுரை : மனம் + தலை
இனம் + தலைப்பெய்தனன்
தனம் + தலைவா
நனம் + தலை
இமையோரும் தேவர்களும்
எங்கள் தனம் தலைவா எனும் "எங்களுக்கு செல்வமே ! தலைவனே ! " என்று வணங்கும்
வேங்கட வாண திரு வேங்கடமுடையானே !
தடம் கடலுள் பெரிய பாற்கடலில்
நனம் தலை நாக அணையாய் பரந்த ஆதி சேஷன் ஆகிய சயனத்தை உடையவனே !
உற மனம் எண்ணி நன்றாக மனதால் தியானித்து ,
தலை வணங்கி உடலால் நமஸ்கரித்து ,
வாக்கு வழுத்தும் சொல்லால் துதிக்கும்
தொண்டர் இனம் தலைப்பெய்தனன் உனது அடியார்களுடைய கூட்டத்தோடு சேர்ந்தேன்
ஈது அன்றியே இதைத் தவிர
அன்பும் ஞானமும் அறியேன் பக்தி ஞானம் இவைகளை நான் அறிய மாட்டேன்