Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 75/100 வேங்கடவா ! தொண்ட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 75/100 வேங்கடவா ! தொண்ட

    திரு வேங்கடத்து அந்தாதி 75/100 வேங்கடவா ! தொண்டர் இனம் தலைப்பெய்தனன் !

    மனந்தலை வாக்குறயெண்ணி வணங்கி வழுத்தும் தொண்டர்
    இனந்தலைப்பெய்தனனீ தன்றியே இமையோரும் எங்கள்
    தனந்தலைவா எனும் வேங்கடவாண தடங்கடலுள்
    நனந்தலை நாகணையாய் அறியேன் அன்பும் ஞானமுமே



    பதவுரை : மனம் + தலை
    இனம் + தலைப்பெய்தனன்
    தனம் + தலைவா
    நனம் + தலை

    இமையோரும் தேவர்களும்
    எங்கள் தனம் தலைவா எனும் "எங்களுக்கு செல்வமே ! தலைவனே ! " என்று வணங்கும்
    வேங்கட வாண திரு வேங்கடமுடையானே !
    தடம் கடலுள் பெரிய பாற்கடலில்
    நனம் தலை நாக அணையாய் பரந்த ஆதி சேஷன் ஆகிய சயனத்தை உடையவனே !
    உற மனம் எண்ணி நன்றாக மனதால் தியானித்து ,
    தலை வணங்கி உடலால் நமஸ்கரித்து ,
    வாக்கு வழுத்தும் சொல்லால் துதிக்கும்
    தொண்டர் இனம் தலைப்பெய்தனன் உனது அடியார்களுடைய கூட்டத்தோடு சேர்ந்தேன்
    ஈது அன்றியே இதைத் தவிர
    அன்பும் ஞானமும் அறியேன் பக்தி ஞானம் இவைகளை நான் அறிய மாட்டேன்
Working...
X