Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 73/100 வேங்கடவா ! நின்ற

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 73/100 வேங்கடவா ! நின்ற

    திரு வேங்கடத்து அந்தாதி 73/100 வேங்கடவா ! நின்றதும் , உதைத்ததும் , அளந்ததும் , நடந்ததும் நின் திருவடிகளே !

    தடவிகடத்தலைவேழமுன்னின்ற்ன சாடுதைத்து
    புடவிகடத்தலையீரேழளந்தன பூந்திருவோ-
    டடவிகடத்தலைவெட்டன வேன்கடத்தப்பன் புள்ளைக்-
    கடவிகடத்தலைநெய்யுண்டமாதவன் கான்மலரே



    பதவுரை : தட + விக்ட + தலை
    புடவிகள் + தத்து + அலை
    அடவி + கடத்தலை
    கடவி + கடத்து + அலை


    புள்ளைக் கடவி கருடனை வாகனமாய் உடையவனும்
    கடத்தலை நெய் உண்ட குடத்தில் இருந்த வெண்ணெயை விழுங்கியவனும்
    மாதவன் மஹாலக்ஷ்மியின் கணவனுமான
    வேங்கடத்து அப்பன் கால் மலர் வேங்கடவனுடைய திருவடித் தாமரைகள்
    தட விகடத் தலை வேழ முன் பெரிய மாறுபட்ட தலை உடைய யானையின் முன்னே
    நின்றன சென்று நின்றன .
    சாடு உதைத்து சகடாசுரனை உதைத்துத் தள்ளி
    தத்து அலை படவிகள் பாயும் அலைகள் உடைய கடல் சூழ்ந்த
    ஈர் ஏழ் அளந்தன பதினான்கு உலகங்களையும் அளந்தன .
    பூந் திருவோடு தாமரை மலர் வாழும் திருமகள் (சீதை ) உடன்
    அடவி கடத்தலை வேட்டன வனத்தை விரும்பிக் கடந்தன .


    Last edited by sridharv1946; 20-08-13, 19:08.
Working...
X