Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 70/100 வேங்கடவன் கழலை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 70/100 வேங்கடவன் கழலை

    திரு வேங்கடத்து அந்தாதி 70/100 வேங்கடவன் கழலை உகவார் வேதனையில் உழல்வார் !

    மெய்த்தவம்போருக வெஞ்சொலிராமன்வில்வாங்கிவளைத்-
    துய்த்தவம்போருக நாலுஞ்செய்தொருயர்வேங்கடத்து
    வைத்தவம்போருகப்பூவார்கழலைமறைமனுநூல்
    பொய்த்தவம்போருகவார்காமம்வேட்டுப்புரளுவரே


    பதவுரை : மெய் + தவம் + போர் + உக
    உய்த்த + அம்போர் + உகம்
    வைத்த + அம்போருகம்
    பொய்த்த + வம்போர் + உகவார்

    வெம் சொல் இராமன் கடும் சொற்களைக் கூறிய பரசு ராமனுடைய
    வில் வாங்கி வளைத்து போர் வில்லை வாங்கி வளத்து யுத்தத்தில்
    மெய் தவம் உக அவருடைய உண்மையான தவத்தை அழித்தவரும்
    உகம் நாலும் செய்தோர் நான்கு யுகங்களை செய்தவருமான திருமால்
    உயர் வேங்கடத்து வைத்த உயர்ந்த திருவேங்கடமலையில் வைத்த
    அம்போருகப் பூ ஆர் கழலை தாமரை மலர் போன்ற திருவடிகளை
    மறை மனு நூல் வேதங்களையும் மனு சாஸ்திரத்தையும்
    பொய்த்த வம்போர் உகவார் பொய் என்று கூறும் வம்பர்கள் விரும்பாமல்
    காமம் வேட்டு புரளுவர் சிற்
    றின்பத்தை விரும்பி வருந்துவர்
    Last edited by sridharv1946; 18-08-13, 21:32.
Working...
X