திரு வேங்கடத்து அந்தாதி 68/100 வேங்கடவனை வணங்கி விருபியதைப் பெறலாம் !
ஏறுகடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர் இருகோட்-
டூறுகடாமழை ஓங்கல் கடாவுவர் - ஓடு அருவி
ஆறுகடாத அமுது எனப் பாய அரி கமுகத்-
தாறுகடாவும் வட வேங்கடவரைத் தாழந்தவரே
பதவுரை : ஏறு + கடாவுவர்
உறு + கடா
ஆறு + கடாத
தாறுகள் + தாவும்
ஓடு அருவி ஆறு நதிகளாக விரைந்து ஓடும் நீர் அருவிகள்
கடாத அமுது எனப் பாய கடுக்காத அமுதம் போல் பாய்ந்து வர
கமுகத் தாறுகள் தாவும் அரி பாக்குக் குலைகள் மீது ஏறும் குரங்குகள் உள்ள
வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே வேங்கடவனை வணங்கியவர்கள்
ஏறு கடாவுவர் எருது மேல் செல்வர் (சிவன் )
அன்னம் கடாவுவர் அன்னத்தின் மேல் செல்வர் (பிரம்மா)
ஈர் இரு கோட்டு நான்கு தந்தங்களை உடையதும்
ஊறு கடாம் மழை சுரக்கும் மத நீர் உடையதுமான
ஓங்கல் கடாவுவர் மலை போன்ற யானை மேல் செல்வர் (இந்திரன் )