திரு வேங்கடத்து அந்தாதி 63/100 நின்றான் கிடந்தான் இருந்தான் நடந்தான் வாழி !
தாங்கடலாழி வளை தண்டு வாள் வில்லில் தானவரை
ஈங்கட வீசி குறித்து அடித்து துணித்து எய்து வெல்லும்
பூங்கடல் வண்ணன் நிலை கிடை வந்தது போக்கு இருப்பு
வேங்கடம் வேலை அயோத்தி வெங்கானகம் விண்ணுலகே

பதவுரை : தாங்கு + அடல்
ஈங்கு + அட
பூ + கடல்
ஈங்கு தானவரை அட இவ்வுலகில் அசுரர்களை அழிக்க
தாங்கு அடல் ஆழி வீசி ஏந்திய வலிமையான சக்கரத்தை வீசியும்
வளை குறித்து சங்கை முழங்கியும்
தண்டு அடித்து கதையால் அடித்தும்
வாள் துணித்து வாளால் அறுத்தும்
வில்லில் எய்து வில்லிலிருந்து அம்பு எய்தியும்
வெல்லும் பூங்கடல் வண்ணன் வெல்பவனான கடல் போன்ற நிறமுடைய திருமால்
நிலை வேங்கடம் நின்ற கோலமாய் இருப்பது வேங்கட மலையில்
கிடை வேலை பள்ளி கொண்டிருப்பது பாற்கடலில்
வந்தது அயோத்தி அவதரித்த இடம் அயோத்தியில்
போக்கு கானகம் நடந்தது கடுமையான காடு
இருப்பு விண்ணுலகே வீற்றிருப்பது ஸ்ரீ வைகுண்டத்தில்