Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 61/100 வேங்கடவன் தாள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 61/100 வேங்கடவன் தாள்

    திரு வேங்கடத்து அந்தாதி 61/100 வேங்கடவன் தாள் வணங்காற்கு விடுமோ சனன மரணம் ?

    பண்டையிருக்குமறியாப்பரமபதத்தடியா-
    ரண்டையிருக்கும்படிவைக்குமப்பனையண்டத்துக்குந்-
    தண்டையிருக்குமலர்ந்த்செவ்வாயனைத்தாள் வணங்கா-
    மண்டையிருக்கும் விடுமோ சனனமரணமுமே ?




    பதவுரை : ண்டை + இருக்கும் (ரிக் வேதம் )
    அண்டை + இருக்கும் (வசிக்கும்)
    தண் + தையிருக்கும்
    மண்டை + இருக்கும் (உடைய )

    பண்டை இருக்கும் அறியா பழமையான வேதங்களும் நன்கு அறியாத
    பரம பதத்து அடியார் அண்டை ஸ்ரீ வைகுண்டத்தில் அடியார்கள் அருகில்
    இருக்கும்படி வைக்கும் அப்பனை இருக்கும்படி வைத்து அருளும் திருமலை அப்பனை
    அண்டத்துக்கும் தண் தையிருக்கும் உலகங்களையும் குளிர்ந்த தயிரையும் விழுங்க
    மலர்ந்த செவ்வாயனை திறந்த சிவந்த வாய் உடையவனை
    தாள் தொழா மண்டை இருக்கும் திருவடி தொழாத தலையை உடைய உங்களுக்கு
    சனன மரணமும் விடுமோ பிறப்பும் இறப்பும் நீங்குமோ ?
    Last edited by sridharv1946; 15-08-13, 20:51.
Working...
X