Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 60/100 வேங்கட மால் விர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 60/100 வேங்கட மால் விர

    திரு வேங்கடத்து அந்தாதி 60/100 வேங்கட மால் விரும்பார் தாங்கள் தம்மால் அழிவர் !

    தீங்கடமாலத்திமுன்னின்று காலிப்பின்சென்ற கொண்டல்
    வேங்கடமால் கழலே விரும்பார் விலைமாதர்மல-
    மாங்கடமால்செயமாலாயவரெச்சிலாகநச்சித்-
    தாங்கடமாலழிவாரிருந்தாலுஞ்சவப்பண்டமே




    பதவுரை : தீங்கு + அட + மால் (பெரிய )
    வேங்கட + மால் (திருமால்)
    ஆம் + கடம் + மால் (மயக்கம்)
    தாங்கள் + தமால்

    தீங்கு அட முதலையினால் உண்டான தீமையை அழிப்பதற்காக
    மால் அத்தி முன் நின்று பெரிய கஜேந்திரன் முன்னால் நின்று
    காலி பின் சென்ற கிருஷ்ணனாய் பசுக்களின் பின் போன
    கொண்டல் நீர் கொண்ட மேகம் போன்றவனான
    வேங்கட மால் வேங்கட மலையில் இருக்கும் திருமாலின்
    கழலே விரும்பார் திருவடிகளையே விரும்பாமல்
    விலைமாதர் பொது மகளிர்களுடைய
    மலம் ஆம் கடம் அசுத்தம் நிறைந்த பாண்டம் போன்ற உடல்
    மால் செய மயக்கத்தைக் கொடுக்க
    மால் ஆய் அவர்கள் மீது மோஹம் கொண்டு
    அவர் எச்சில் ஆகம் நச்சி அவர்களுடைய எச்சில் ஆகிய உடலை விரும்பி
    தாங்கள் தமால் அழிவர் தாங்கள் தங்களாலேயே அழிபவர்கள்
    இருந்தாலும் உயிர் வாழ்ந்தாலும்
    சவப் பண்டமே பிணம் போல் பொருளே ஆவர் !

    Last edited by sridharv1946; 15-08-13, 19:36.
Working...
X