Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 58/100 வட மலை வராஹருக்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 58/100 வட மலை வராஹருக்

    திரு வேங்கடத்து அந்தாதி 58/100 வட மலை வராஹருக்கு வானவர் மசகங்களே !

    தானவராகந்தடிவார்வடமலைதண்ணந்துழாய்
    ஞானவராகர் தருமண்டம்யாவையு நண்ணியவர்
    கானவராகவிரறோறுமத்திக்கனியின்வைகும்
    வானவராகவிருப்பாரவற்றுண்மசகங்களே



    பதவுரை : தானவர் + ஆகம்

    ஞான + வராகர்
    கால் + நவ + ராக
    வானவர் + ஆக

    தானவர் ஆகம் தடிவார் அசுரர்களின் உடலை அழிப்பவரும்
    வடமலை திருமலையில் உள்ளவரும்
    தண் அம் துழாய் குளிர்ந்த அழகிய துளசி மாலை அணிந்தவருமான
    ஞான வராகர் ஞான வராஹ மூர்த்தி
    தரும் அண்டம் யாவையும் படைத்த அண்ட கோளங்கள் எல்லாம்
    அவர் கால் அவரது திருவடிகளில்
    நவ ராக விரல் தோறும் புதிய சிவந்த விரல்கள் தோறும்
    அத்திக் கனியின் நண்ணி வைகும் அத்திப் பழங்கள் போல் பொருந்தி இருக்கும்
    வானவர் ஆக இருப்பார் தேவர்களாக இருப்பவர்கள்
    அவற்றுள் மசகங்களே அதன் மேல் மொய்க்கும் கொசுக்கள் போல்வர்
    Last edited by sridharv1946; 15-08-13, 17:37.
Working...
X