திரு வேங்கடத்து அந்தாதி 54/100 மாதவா ! மாது தந்த கனியைக் காதலுடன் ஏற்றவனே !
கருமாதவாவிருந்தாவனசெய்தென்கருத்திருளைப்-
பொருமாதவாவிருந்தாவனத்தாய் பொற்சவரியென்னும்
ஒருமாதவாவிருந்தாவனக்காவுயர்வேங்கடத்தெம்
பெருமாதவாவிருந்தாவனலேயும்பிறைக்கொழுந்தே
பதவுரை : கரு + மாதவா + இருந்து + ஆவன
பொரும் + ஆதவா + விருந்தாவனத்தாய்
ஒரு + மாது + அவா + விருந்தா
பெருமா + தவா + இரும் + தாவு + அனல்
கரு மாதவா கரிய நிறம் உள்ள மாதவனே !
இருந்து என் மனத்தில் வீற்றிருந்து
ஆவன செய்து ஆக வேண்டிய நன்மைகளைச் செய்து
என் கருத்து இருளை எனது அக இருளான அஞ்ஞானத்தை
பொரும் ஆதவா ஒழித்த சூரியன் போன்றவனே !
விருந்தாவனத்தாய் பிருந்தாவனத்தில் விளயாடியவனே !
பொற்சவரி என்னும் ஒரு மாது சபரி என்கிற உத்தமப் பெண்ணின்
அவா விருந்தா விரும்பிய விருந்தினனே !
வனக் காஉயர் அழகிய சோலைகள் உயரமாய் வளர்ந்த
வேங்கடத்து எம் பெருமா வேங்கடத்தில் இருக்கும் தலைவனே !
பிறைக் கொழுந்தே இளம் பிறையானது
தவா இரும் கெடாது இருக்கும்
தாவு அனல்ஏயும் தாவி எரியும் நெருப்பைப் போல் சுடுகிறது (உன் பிரிவால்)