திரு வேங்கடத்து அந்தாதி 53/100 தொண்டை மான் கையில் சங்காழி கொடல் நன்றே ! என் மான் கையில் சங்காழி கோடல் நன்றோ ?
தனித்தொண்டைமானிலத்தேபுரிவார்க்கருடாளுடையாய்
தொனித்தொண்டைமாநெடுவாய்பிளந்தாய்துங்கவேங்கடவா
முனித்தொண்டைமான்கையிற்சங்காழிநல்கியென்மூரற்செவ்வாய்க்-
கனித்தொண்டைமான்கையிற்சங்காழிகோடல்கருமமன்றே
பதவுரை :தனி + தொண்டை + மா + நிலத்தே
தொனி + தொண்டை + மான்
முனி + தொண்டைமான்
கனி + தொண்டை + மான்
மா நிலத்தே பெரிய பூமியில்
தனித் தொண்டை புரிவார்க்கே ஒப்பற்ற பக்தி செய்பவர்க்கு
அருள் தாள் உடையாய் அருளுகின்ற திருவடிகளை உடையவனே !
தொனி தொண்டை மான் கனைக்கும் தொண்டையை உடைய (கேசி) குதிரையினுடைய
நெடு வாய் பிளந்தவனே பெரிய வாயை பிளந்தவனே !
துங்க வேங்கடவா உயரமான வேங்கட மலையில் இருப்பவனே !
முனி தொண்டைமான் கையில் ராஜ ரிஷியான தொண்டைமானின் கைகளில்
சங்கு ஆழி நல்கி சங்க சக்கரங்களைகே கொடுத்து
மூரல் புன்முறுவலுடன் கூடிய
கனி தொண்டைசெவ்வாய் தொண்டைப் பழம் போன்ற சிவந்த வாய் உள்ள
என் மான் கையில் மான் போன்ற என் மகள் கைகளில் இருந்து
சங்கு ஆழி கோடல் வளைகளையும் மோதிரத்தையும் கவர்ந்து கொள்ளல்
கருமம் அன்று நல்ல செயல் இல்லை