Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 52/100 சரணம் அடைந்தேன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 52/100 சரணம் அடைந்தேன&

    திரு வேங்கடத்து அந்தாதி 52/100 சரணம் அடைந்தேன் ! சரணம் அருள்வாய் சரண்யா !



    எனக்குப்பணியப்பணியொருகாலிருகாலுநல்க-
    வுனக்குப்பணியிங்கிருவேம்பணியிலென்னோர்பணியு-
    நினக்குப்பணிவித்துக்கொண்டுன்பணிநீபணித்திலையென்-
    றனக்குப்பணிவெற்பின்மீதோங்கிநின்றதனிச்சுடரே


    பதவுரை : எனக்கு + பணி (தொழில்)
    உனக்கு + பணி (தொழில்)
    நினக்கு + பணிவித்து (செய்வித்து)
    தனக்கு + பணி + வெற்பின் ( சேஷ கிரி )

    பணி வெற்பின் மீது சேஷ கிரி எனும் வேங்கட மலையின் மீது
    ஓங்கி நின்ற உயர்ந்து நின்ற கோலத்தில் இருக்கும்
    தனிச் சுடரே ஒப்பற்ற ஒளி வடிவானவனே !
    ஒரு கால் பணிய உன்னை ஒரு தரம் சரணம் அடைந்து வணங்குதல்
    எனக்குப் பணி எனக்கு உரிய தொழில் .
    இரு காலும் நல்க எனக்கு உன் இரண்டு திருவடிகளையும் கொடுப்பது
    உனக்குப் பணி உனக்கு உரிய தொழில் .
    இங்கு இரு வேம் பணியில் இந்த இரு வேலைகளில்
    என் ஓர் பணியும் உன்னைப் பணியும் எனது தொழிலை மாத்திரம்
    நினக்குப் பணிவித்துக் கொண்டு உனக்கு செய்வித்துக் கொண்டு
    உன் பணி திருவடிகளைக் கொடுக்கும் உனது தொழிலை
    என் தனக்குப் பணித்திலை எனக்கு செய்யவில்லை
Working...
X