திரு வேங்கடத்து அந்தாதி 50/100 கிளிகளே ! கண்ணனிடம் என் நேசம் எல்லாம் உரைப்பீர் !
சென்றவனத்தத்தைமைந்தரை வாழ்வித்துத்தீயமன்னர்
பொன்றவனத்தத்தைச்செய்தபிரான் புகழ்வேங்கடத்து-
ணின்றவனத்தத்தையாயுதன்பாதத்தென்னேசமெல்லாம்
ஒன்றவனத்தத்தைக்காளுரையீரறமுண்டுமக்கே
பதவுரை : சென்ற + வனத்து +அத்தை
பொன்ற + அனத்தத்தை
நின்றவன் + அத்தத்து + ஐ
ஒன்ற + வன + தத்தை
வனத் தத்தை காள் அழகிய கிளிகளே !
வனத்து சென்ற காட்டிற்கு சென்ற
அத்தை மைந்தரை வாழ்வித்து குந்தியின் மக்கள் ஆகிய பாண்டவர்களை வாழச் செய்து
தீய மன்னர் பொன்ற கொடிய அரசர்கள் அழியுமாறு
அனத்தத்தை செய்த பிரான் கேட்டை அளித்த பிரபுவும் ,
அத்தத்து ஐ ஆயுதன் கைகளின் ஐந்து ஆயுதங்களை உடையவனும் ,
புகழ் வேங்கடத்து நின்றவன் பாதத்து புகழ் உள்ள வேங்கட மலையில் நிற்பவன் திருவடிகளில்
என் நேசம் எல்லாம் எனது அன்பு முழுவதையும்
ஒன்ற உரையீர் பொருந்தும்படி சொல்லுங்கள்
அறம் உண்டு உமக்கே உங்களுக்கு புண்ணியம் உண்டு !