திரு வேங்கடத்து அந்தாதி 48/100 வேங்கடேசன் போல் பக்தையும் ஆழி , சங்கு நீங்கி நின்றாள் !
மணியாழிவண்ணநுகந்தாரைத்தன்வடிவாக்குமென்றே
துணியாழியமறைசொல்லும் தொண்டீரதுதோன்றக்கண்டோம்
பணியாழின்மென்மொழிமாலாகி பள்ளிகொள்ளாமல் சங்கோடு
அணியாழிநீங்கினின்றாள் வேங்கடேசனையாதரித்தே
பதவுரை : மணி + ஆழி (கடல் )
துணி + ஆழிய (ஆழ்ந்த )
பணி + யாழின்
அணி + ஆழி (மோதிரம் )
தொண்டீர் பக்தர்களே !
மணி ஆழி வண்ணன் நீல மணியும் கடலும் போன்ற நிறமுடைய திருமால்
உகந்தாரை தன வடிவு ஆக்கும் என்றே பக்தர்களை தன்னைப் போலவே மாற்றுவான் என்று
துணி ஆழிய மறை சொல்லும் துணிவுடன் ஆழ்ந்த பொருள் உள்ள வேதம் கூறும்
அது தோன்றக் கண்டோம் அதை நேரிடையாகப் பார்த்தோம்
பணி யாழின் மென்மொழி வளைந்த வீணையின் இசை போன்ற குரல் உடைய இந்த பெண்
வெங்கடேசனை ஆதரித்தே மாலாகி திரு மாலை விரும்பி அவன் மீது மயக்கம் ஆகி
பள்ளி கொள்ளாமல் படுத்துக் கொள்ளாமல்
சங்கோடு அணி ஆழி நீங்கி வளையும் மோதிரமும் கழன்று விழ
நின்றாள் நின்றிருக்கிறாள்