திரு வேங்கடத்து அந்தாதி 41/100 வேங்கடவா ! நீ ஆதரிக்காமல் நான் தரிக்க முடியாது !
கருத்தாதரிக்குமடியேனைத்தள்ளக்கருதிக்கொலொ
திருத்தாதரிக்குமைவர்க்கிரையாக்கினை- செண்பகத்தின்
மருத்தாதரிக்குமருவியறாவடவேங்கடத்துள்
ஒருத்தாதரிக்கும்படியெங்ஙனேயினிஉன்னைவிட்டே
பதவுரை : கருத்து + ஆதரிக்கும்
திருத்தாது + அரிக்கும் (கெடுக்கும் )
மரு + தாது + அரிக்கும் (அரித்து )
ஒருத்தா + தரிக்கும்படி
செண்பகத்தின் மரு தாது சண்பக மலரின் மகரந்தப் பொடிகளை
அரிக்கும் அருவி அரித்துக் கொண்டு வரும் அருவி
அறா வடவேங்கடத்துள் இடைவிடாது ஓடும் வேங்கட மலையில் இருக்கும்
ஒருத்தா ஒப்பற்ற கடவுளே !
கருத்து ஆதரிக்கும் அடியேனை மனதில் உன்னையே விரும்புகிற தாசனான என்னை
தள்ளக் கருதிக் கொலோ தள்ளி விட நினைத்தோ
திருத்தாது சீர் திருத்தாமல்
அரிக்கும் ஐவர்க்கு கெடுக்கும் பஞ்சேந்திரியங்களுக்கு
இரை ஆக்கினை உணவு ஆக்கிவிட்டாய் ?
இனி உன்னை விட்டு இனி மேல் நீ இல்லாமல்
தரிக்கும் படி என்னே வாழும் வழி என்ன ?