Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 33/100 முத்திக்கு வித&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 33/100 முத்திக்கு வித&

    திரு வேங்கடத்து அந்தாதி 33/100 முத்திக்கு வித்தகன் முகுந்தனே !

    சித்திக்குவித்துயதுவோஇது
    வோயென்றுதேடிபொய்ன்னூல்
    கத்திக்குவித்தபல்புத்தகத்தீர் கட்டுரைக்கவம்
    மின்
    அத்திக்கித்தனையுமுண்டவேங்கடத்தச்சுதனே
    முத்திக்குவித்தகனென்றே
    சுருதிமுறையிடுமே






    பதவுரை : சித்திக்கு + வித்து
    கத்தி + குவித்த
    அத்திக்கு + இத்தனையும்
    முத்திக்கு + வித்தகன்



    சித்திக்கு வித்து பரம பதத்தை அடைய மூல காரணம்
    அதுவோ இதுவோ என்று தேடி அப்பொருளோ இப்பொருளோ என்று ஆராய
    பொய் நூல் கத்திக் குவித்த பொய்யான பர சமய நூல்களைத் தொண்டை நோகப் படித்த
    பல் புத்தகத்தீர் பல புத்தகங்களை உடையவர்களே !
    கட்டு உரைக்க வம்மின் நான் உறுதியாக சொல்ல அதைக் கேட்க வாருங்கள்
    அத்திக்கு இத்தனையும் உண்ட கடல் சூழ்ந்த உலகம் முழுதும் உண்ட
    வேங்கடத்து அச்சுதனே திரு வேங்கட நாதனே
    முத்திக்கு அச்சுதன் என்றே "வீடு பேறுக்குக் காரணமான ஞான ஸ்வரூபன்" என்று
    சுருதி முறையிடுமே வேதங்கள் உறுதியாக கூறுகின்றன




    Last edited by sridharv1946; 01-08-13, 19:56.
Working...
X