Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 30/100 நமனிடமிருந்து &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 30/100 நமனிடமிருந்து &

    திரு வேங்கடத்து அந்தாதி 30/100 நமனிடமிருந்து அன்று காக்க இன்றே சரணடைகிறேன் நாரணா !

    நடைக்கலங்காரமடவார்விழிக்கு நகைக்குச்செவ்வாய்க்-
    கிடைக்கலங்காரமுலைக்கிச்சையான்விவனென்றெண்ணிப்-
    படைக்கலங்காணத்துரந்தே நமன்றமர்பற்றுமன்றைக்-
    கடைக்கலங்காணப்பனே யலர்மேன்மங்கையங்கத்தனே


    பதவுரை : நடைக்கு + அலங்கார
    டைக்கு + அலங்கு + ஆர
    படைக்கலம் +
    காண
    அடைக்கலம் +
    காண்


    அப்பனே ஸ்வாமி !
    அலர் மேல் மங்கை அங்கத்தனே அலர் மேல் மங்கையை மார்பில் உடையவனே !
    அலங்கார மடவார் அழகுடைய பெண்களின்
    நடைக்கு விழிக்கு நடை அழகிற்கும் , கண் அழகிற்கும்
    நகைக்கு செவ்வாய்க்கு புன்சிரிப்பின் அழகிற்கும் , சிவந்த வாயின் அழகிற்கும் ,
    இடைக்கு இடையின் அழகிற்கும் ,
    அலங்கு ஆர முலைக்கு புரளும் மாலைகளை அணிந்த தனங்களின் அழகிற்கும்
    இச்சையான் இவன் என்று எண்ணி விரும்பி ஈடுபடுபவன் இவன் என்று நினைத்து
    நமன் தமர் யமனுடைய தூதர்கள்
    படைக்கலம் காணத்துரந்து ஆயுதங்களை நான் கண்டு அஞ்சும்படி என் மீது பிரயோகித்து
    பற்றும் அன்றைக்கு பிடித்துக்கொண்டு போகும் அந்திமக் காலத்தில்
    அடைக்கலம் காண் என்னைப் பாதுகாப்பதற்காக இன்றே உன்னை சரன் அடைக்கிறேன் !


    Last edited by sridharv1946; 01-08-13, 12:28.
Working...
X