Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 27/100 நஞ்சை அமுதாய் உ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 27/100 நஞ்சை அமுதாய் உ

    திரு வேங்கடத்து அந்தாதி 27/100 நஞ்சை அமுதாய் உண்ட நந்தபாலனுக்கு என் பாடலும் சிறக்கும் !

    தொழும்பாலமரர்தொழும்வேங்கடவன்சுடர்நயனக்-
    கொழும்பாலனையொருகூறுடையானந்தகோபனில்லத்-
    தழும்பானாகியகாலத்துப்பேய்ச்சியருத்துநஞ்சைச்-
    செழும்பாலமுதென்றுவந்தாற்கென்பாடல்சிறக்குமன்றே


    பதவுரை : தொழும்பால்
    கொழும் + பாலனை
    அழும் + பாலன்
    செழும் + பால்

    சுடர் நயன நெருப்புக் கண்ணை
    கொழும் பாலனை கொழுமையான நெற்றியில் உடைய சிவனை
    ஒரு கூறு உடையான் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்டவனும்
    நந்தகோபன் இல்லத்து நந்தகோபன் திரு மாளிகையில்
    அழும் பாலன் ஆகிய காலத்து குழந்தையாக அழும் காலத்தில்
    பேய்ச்சி அருத்து நஞ்சை பேய் மகள் பூதனை ஊட்டிய விஷத்தை செழும் பால் அமுது என செழித்த பால் உணவு என்று
    உவந்தான் விரும்பி உட்கொண்டவனுமான
    தொழும்பால் அடிமைத்தனத்தால்
    அமரர் தொழும் வேங்கடவற்கு தேவர்கள் வணங்கும் வேங்கடமுடையானுக்கு
    என் பாடல் சிறக்கும் அன்றே எனது பாடல்கள் சிறந்தது ஆகும் அன்றோ ?

Working...
X