Announcement

Collapse
No announcement yet.

திருவேங்கடத்தந்தாதி 26/100 நீள் மறலி வடம் வீச&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவேங்கடத்தந்தாதி 26/100 நீள் மறலி வடம் வீச&

    திருவேங்கடத்தந்தாதி 26/100 நீள் மறலி வடம் வீசு முன்னே நாரணனை வணங்குவீர் !

    அஞ்சக்கரவடமூலத்தன்போதனறிவரிய
    செஞ்சக்கரவடவேங்கடநாதனைத்தேசத்துள்ளீர்
    நெஞ்சக்கரவடநீக்கியின்றேதொழுநீண்மறலி
    துஞ்சக்கரவடம்வீசுமக்காலந்தொழற்கரிதே


    பதவுரை : அஞ்சு + அக்கர + வட (ஆல மரம் )
    செம் + சக்கர + வட (வடக்கு )
    நெஞ்ச + கரவடம் (குற்றம்)
    துஞ்ச + கர + வடம் (பாசக் கயிறு)

    தேசத்துள்ளீர் நாட்டில் உள்ளவர்களே !
    அஞ்சு அக்கரம் பஞ்சாக்ஷரத்துக்கு உரியவனும் ,
    வட மூலத்தன் ஆலமரத்தடியில் அமர்ந்தவனுமான சிவன்
    போதன் பிரமன் முதலானோர்
    அறிவு அரிய அறிவதற்கு அரியவனான
    செம் சக்கர சிவந்த சக்கரத்தை உடைய
    வட வேங்கட நாதனை திரு வேங்கடமுடையானை
    நெஞ்சக் கரவடம் நீக்கி மனத்தில் உள்ள குற்றங்களை ஒழித்து
    இன்றே தொழும் இப்பொழுதே வணங்குங்கள்
    நீள் மறலி பெரிய வடிவமுள்ள யமன்
    துஞ்ச நீங்கள் இறக்கும்படி
    கரவடம் வீசும் கையில் உள்ள பாசக் கயிற்றை வீசும்
    அக்காலம் அந்த அந்திமக் காலத்தில்
    தொழற்கு அரிது வேங்கடவனை வணங்குவதற்கு முடியாது !


    Last edited by sridharv1946; 30-07-13, 20:04.
Working...
X