திரு வேங்கடத்து அந்தாதி 23/100 ஜென்மும் மரணமும் இன்றித் தீர் ஜெகன்னாதா !
வேதாவடமலைவெங்காலங்கையில்விடுவித்தென்னை
மாதாவடமலைகொங்கைஉண்ணாதருள்மண்ணளந்த
பாதாவடமலைமேற்றுயின்றாய்கடற்பார்மகளுக்கு
நாதாவடமலையாயலர்மேல்மங்கைநாயகனே
பதவுரை : வேதா + வடம் +அலை (பாசக் கயிறு)
மாதா + வடம் +அலை (மாலை)
பாதா + வடம் + அலை (ஆலிலை )
நாதா + வட + மலை (வேங்கடம்)
மண் அளந்த பாதா பூமியை அளந்த திருவடியை உடையவனே !
வடம் அலை மேல் துயின்றாய் பிரளய சமுத்திரத்தில் ஆலிலை மீது துயின்றவனே !
கடல் பார் மகளுக்கு நாதா கடல் சூழ்ந்த பூமி தேவிக்கு நாயகனே !
வட மலையாய் வேங்கட நாதா !
அலர்மேல் மங்கை நாயகனே அலர் மேல் மங்கை மணாளனே !
வேதா பிறப்பு அளிக்கும் பிரமன் ,
வடம் அலை வெங்காலன் இறப்பு அளிக்கும் பாசக் கயிறு கொண்டு வருத்தும் எமன்
கையில் விடுவித்து இவர்கள் கையில் இருந்து விடுதலை செய்து
வடம் அலை ஆரங்கள் புரளும்
மாதா கொங்கை உண்ணாது தாயின் தனங்களின் பாலைக் குடிக்காதபடி
என்னை அருள் எனக்கு அருள் செய்வாய்