திரு வேங்கடத்து அந்தாதி 19/100 வெண்மதியே ! வேங்கடவனை வேட்டாயோ ? உடல் வற்றி வெளுத்ததேன் ?
பற்றியிராமற்கலைபோய்வெளுத்துடல்பாதியிரா-
வற்றியிராப்பகனின்கண்பனிமல்கிமாசடைந்து
நிற்றியிராகமொழிச்சியைபோனெடுவேங்கடத்துள்
வெற்றியிராமனைவேட்டாய்கொனீயுஞ்சொல்வெண்மதியே
பதவுரை : பற்றி + இராமல்
வற்றி + இரா
நிற்றி + இராக
வெற்றி + இராமனை
வெண்மதியே வெண்ணிறமான சந்திரனே !
பற்றி இராமல் நிலைத்து நிற்காமல்
கலை போய் ஒளி மழுங்கப்பெற்று
வெளுத்து நிறம் வெளுத்து
உடல் பாதி இரா வற்றி வடிவம் பாதியும் இல்லாதபடி தேய்ந்து
இராப்பகல் இரவும் பகலும்
நின் கண் பனி மல்கி உன் கண்ணில் நீர் வழிந்து
மாசு அடைந்து அழுக்கு அடைந்து
இராகம் மொழிச்சியைப் போல் நிற்றி இனிய குரல் உடைய இப்பெண் போல நிற்கிறாய்
நீயும் அவளைப் போல நீயும்
நெடு வேங்கடத்துள் உயர்ந்த திரு வேங்கட மலையில் உள்ள
வெற்றி ராமனை ராமனை
வேட்டாய் சொல் விரும்பினாயா ? சொல்லுவாய் !