திரு வேங்கடத்து அந்தாதி 14/100 அஞ்சன வெற்ப ! அன்னியரை என் சென்னியும் வாக்கும் வணங்காது வாழ்த்தாது !
ஐயாதுவந்தனைநாயேனையஞ்சனவெற்பவென்றுங்-
கையாதுவந்தனைநின்னையல்லாற்கண்ணுதன்முதலோர்
பொய்யாதுவந்தனையார்முகங்காட்டினும்போற்றியுரை
செய்யாதுவந்தனைபண்ணாதுவாக்குமென்சென்னியுமே
பதவுரை : ஐயா + துவந்தனை
கையாது + உவந்தனை
பொய்யாது + வந்து + அனையார்
செய்யாது + வந்தனை
ஐயா அஞ்சன வெற்ப ஐயனே ! வேங்கட நாதனே !
துவந்தனை நல்வினை, தீவினை இரண்டும் உடைய
நாயேனை நாய் போல் இழிந்த என்னை
என்றும் கையாது எப்போதும் வெறுக்காமல்
உவந்தனை மகிழ்வுடன் ஏற்றாய் !
நின்னை அல்லால் உன்னை விட்டு விட்டு
கண் நுதல் முதலோர் சிவன் முதலியவர்கள்
பொய்யாது வந்து நிஜமாகவே பிரத்யக்ஷமாகி
அனையார் முகம் காட்டினும் அவர்களுடைய முகத்தைக் காட்டினாலும்
என் வாக்கும் சென்னியும் எனது வாயும் தலையும்
போற்றி உரை செய்யாது அவர்களை துதித்துப் பேசாது
வந்தனை பண்ணாது வணங்காது !