திருவேங்கடத்தந்தாதி 8/100 வேங்கட நாதனை வேண்டினால் வேட்கை ஓராது !
வந்திக்கவந்தனைகொள்ளென்றுகந்தனும்மாதவரும்
சிந்திக்கவந்தனைவேங்கடநாதாபல்சீவந்தின்னும்
உந்திக்கவந்தனைச்செற்றாயுனக்குரித்தாயபின்னும்
புந்திக்கவந்தனைச்செய்தைவர்வேட்கையொருமென்னையே
பதவுரை : வந்திக்க + வந்தனை (வணக்கம்)
சிந்திக்க + வந்தனை (தோன்றினாய்)
உந்தி + கவந்தனை (கவந்தன் எனும் அசுரன்)
புந்திக்கு + அவம் + தனை
வந்தனை கொள் "வணக்கத்தை ஏற்றுக்கொள்வாய் "
என்று கந்தனும் வந்திக்க என்று முருகன் வணங்கவும் ,
மா தவரும் சிந்திக்க முனிவர்கள் தியானிக்கவும்
வந்தனை நேரில் வந்து தோன்றினாய்
வேங்கட நாதா திருமலையின் தலைவனே !
பல் சீவன் தின்னும் உந்தி பல உயிர்களை உண்ணும் வயிற்றை உடைய
கவந்தனைச் செற்றாய் கபந்தனைக் கொன்ற ராமனே !
உனக்கு உரித்தாய் பின்னும் உனக்கு உரியதான பின்பும்
ஐவர் வேட்கை ஐம்புலன்களின் ஆசை
புந்திக்கு அவம் தனைச் செய்து அறிவுக்கு அபாயத்தைச் செய்து
என்னை ஒரும் என்னை வருத்தும் (இது நியாயமா ?)