Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 5/100 தூயவன் கண் அன்ப&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 5/100 தூயவன் கண் அன்ப&

    திரு வேங்கடத்து அந்தாதி 5/100 தூயவன் கண் அன்பு உடையார்க்கு தூரம் இல்லை வைகுந்தம் !

    மாயவன்கண்ணன்மணிவண்ணன்கேசவன்மண்ணும்விண்ணுந்-
    தாயவன்கண்ணன்கமலமொப்பான்சரத்தாலிலங்கைத்-
    தீயவன்கண்ணன்சிரமறுத்தான்றிருவேங்கடத்துத்-
    தூயவன்கண்ணன்புடையார்க்குவைகுந்தந்தூரமன்றே

    பதவுரை : மாயவன் + கண்ணன்
    தாயவன் + கண் + நல்
    தீய + வன் + கண்ணன்
    தூயவன் + கண் + அன்பு




    மாயவன் மாயங்களைச் செய்கிறவனும் ,
    கண்ணன் கிருஷ்ணனும் ,
    மணிவண்ணன் நீல மணி போன்ற நிறம் உடையவனும் ,
    கேசவன் கேசி என்றவனைக் கொன்றவனும் ,
    மண்ணும் விண்ணும் தாயவன் பூமியையும் மேல் உலகங்களையும் தாவி அளந்தவனும் ,
    கண் நல் கமலம் ஒப்பான் நல்ல தாமரை போன்ற கண்களை உடையவனும் ,
    இலங்கைத்இலழ்ந்கையில் வாழ்ந்த
    தீய வன்கண்ணன் கெட்ட கண்களை உடையவனுடைய
    சிரம் சரத்தால் அறுத்தான் தலைகளை அம்பினால் வெட்டியவனும் ,
    திரு வேங்கடத்து திரு மலையில் இருக்கும்
    தூயவன்கண் அன்புடையார்க்கு பரிசுத்தமானவனிடம் பக்தி உள்ளவர்களுக்கு
    வைகுந்தம் தூரம் அன்றே வைகுண்டம் அருகில் உள்ளது !


    --


    Last edited by sridharv1946; 23-07-13, 19:30.
Working...
X