Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 98/100 அரங்கன் அருள் சிந்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 98/100 அரங்கன் அருள் சிந்&#

    திருவரங்கத்தந்தாதி 98/100 அரங்கன் அருள் சிந்தித்தே அவன் அடி காண்பேன் !

    ஆங்காரமாமின்னைத்தோய்மார்பரங்கனளைவெண்ணெயுண்டு
    ஆங்காரமாநிலமுண்டாற்குத்தொண்டனிவ்வண்டத்தப்பால்
    ஆங்காரமான்பகுதிப்புறம்போயமுதாற்றிற்படிந்து
    ஆங்காரமானடிகாண்பேனவன்றனருள்சிந்தித்தே

    பதவுரை : ஆம் + கார் + அம் + மா
    ஆங்கு + ஆர + மா
    ஆங்காரம் + மான்
    ஆங்கு + ஆர் + அமான்

    கார் ஆம் அம் மின் மேகத்தில் உண்டாகும் அழகிய மின்னல் போன்ற
    மாவை மகா லக்ஷ்மியைத்
    தோய் மார்பு அரங்கன் தழுவும் மார்பை உடைய ரங்க நாதனும்
    அளை வெண்ணெய் உண்டு ஆங்கு வெண்ணெயை உண்டாற்போலவே
    மா நிலம் உண்டாற்கு உலகத்தையே உண்டவனுமான திருமாலிற்கு
    தொண்டன் பக்தன்ஆகிய நான்
    அவன் தன அருள் சிந்தித்தே அவனுடைய கருணையை தியானித்து
    இவ்வண்டத்து அப்பால் இந்த அண்டகடாஹத்தைத தாண்டி
    ஆங்காரம் மான் பகுதி அஹங்காரம் , மகான் , பிரகிருதி இவைகளை
    புறம் போய் கடந்து மேலே சென்று
    அமுது ஆற்றில் படிந்து விரஜா நதியில் நீராடி
    ஆங்கு ஆர் அமான் அங்கே இருக்கும் பெருமானுடைய
    அடி காண்பேன் திருவடியை தரிசிப்பேன்
Working...
X