திருவரங்கத்தந்தாதி 91 அரங்கனை ,குறியானை , குறி யானை காத்தானைப் பாடினேன் !
குறியானைச்செங்கணெடியானைவானவர்கோவைச்சங்கக்-
குறியானைவித்ததிருவரங்கேசனைக்கூவிநின்று
குறியானைக்காத்தவனைப்பாடினேன்கொடிகூப்பிடினுங்-
குறியானையப்பவர்போற்கொடியேன்சொலுங்கொள்வனேன்றே
பதவுரை : குறியானை
குறியால் + நைவித்த
குறி + யானை
குறியா +நயப்பவர்
கொடி கூப்பிடினும் காக்கை இயல்பாய் கத்தினாலும்
குறியா நயப்பவர் போல் நல்ல சகுனமாய் கொள்பவர் போல்
கொடியேன் சொலும் கொடியவனான என் சொல்லையும்
கொள்வன் என்று நன்மையாக ஏற்றுக் கொள்வன் என்று நினைத்து
குறியானை குறள் வடிவம் கொண்ட வாமனனை ,
செம் கண் நெடியானை சிவந்த கண்கள் உடைய வளர்ந்த த்ரிவிக்ரமனை ,
வானவர் கோவை தேவர்கள் தலைவனான இந்திரனை
சங்கக் குறியால் சங்க முழக்கத்தினால்
நைவித்த திருவரங்கேசனை மயங்கி விழச் செய்த ரங்கநாதனை ,
கூவி நின்று குறி கூவி அழித்து தியானித்த
யானை காத்தவனை கஜேந்திரனை காப்பற்றியவனை .
பாடினேன் கவி பாடினேன்