திருவரங்கத்தந்தாதி 90 நீலம் கண்டு நின்னை நினைப்பவர் நேரில் கண்டால் என்ன நினைப்பர் ?
குவலையஞ்சூழ்கடல்காயாமரகதங்கொண்டனெய்தல்
குவலையங்கண்டன்பர் நைவரென்றாற்கொற்றவாணற்குவா-
குவலையநேமிதொட்டாயரங்காகொடும்பல்பிறப்பா-
குவலையங்கற்றுனைக்காணிலென்னாங்குறிப்பவர்க்கே
பதவுரை :
குவலையம்
குவலை + அம்
வாகு + அலைய
ஆகு +வலை +அங்கு
கொற்ற வாணர்க்கு வெற்றியை உடைய வாணாசுரனுக்கு
வாகு அலைய தோள்கள் துடிக்கும்படி
நேமி தொட்டாய் சக்ராயுதத்தை விட்டவனே !
அரங்கா ரங்கநாதனே !
அன்பர் உனது பக்தர்கள்
குவலையம் சூழ் கடல் பூமியைச் சுற்றி இருக்கிற கடலையும் ,
காயா மரகதம் காயாம்பூவையும் , மரகதக்கல்லையும்
கொண்டல் நெய்தல் நீர் கொண்ட மேகத்தையும் , நெய்தல் மலரையும்
குவலையம் கண்டு குவளை மலரையும் பார்த்து
நைவர் என்றால் உன் வடிவாக நினைத்து உருகுவார் என்றால்
பல் பிறப்பு ஆகும் வலை பல வகைப் பிறப்புகளின் வலைகளின்
அங்கு அற்று தொடர்பு அழிந்து
உனைக் காணில் உன்னை நேரில் கண்டால்
அவர்க்கு குறிப்பு அவர்களுடைய கருத்து
என் ஆம் கொல் என்னவாக மாறும் ?