Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 88 அரங்கனை அண்டினால் அ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 88 அரங்கனை அண்டினால் அ

    திருவரங்கத்தந்தாதி 88 அரங்கனை அண்டினால் அயனும் அஞ்சுவான் !

    நகமுண்டகந்தரித்தாற்கருண்மாயற்குஞாலமுந்நீர்
    நகமுண்டகமகிழ்ந்தாற்கடியேமென்மினற்கதிவா-
    நகமுண்டகம்பரனென்னாதரங்கனைநாடிலயன்
    நகமுண்டகமலர்தான்குவியாதுநடுக்குளத்தே


    பதவுரை : நக + முண்டகம்
    நகம் + உண்டு + அகம்
    வானகம் + உண்டு + அகம்
    நக +முண்டக +மலர்





    நக பிறர் சிரிக்கும்படி
    முண்டகம் தரித்தாற்கு பிரம்ம கபாலத்தை கையில் கொண்ட சிவனுக்கு
    அருள் மாயற்கு கருணை காட்டிய மாயவனும் ,
    ஞாலம் முந்நீர் நகம் பூமி , கடல்கள் , மலைகள் எல்லாவற்றையும்
    உண்டு அகம் மகிழ்ந்தார்க்கு தன் வயிற்றில் அடக்கி மகிழ்ந்தவனுமான திருமாலுக்கு
    அடியேம் என்மின் தொண்டர்கள் ஆனோம் என எண்ணுங்கள் !
    நற்கதி வானகம் உண்டு சிறந்த பதவியான வைகுண்டம் கிடைக்கும் .
    அகம் பரன் என்னாது நானே தலைவன் என்று நினைக்காமல்
    அரங்கனை நாடில் ரங்கநாதனைச் சரண் அடைந்தால்
    அயன் நக முண்டக மலர் பிரம்மாவினுடைய கைத்தாமரை
    நடுக் குளத்தே உங்கள் நடுத் தலையில்
    தான் குவியாது மீண்டும் பிறக்கும்படி எழுதக் குவியாது !


Working...
X