Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 85 ஆழ்வார்கள் போற்றிய

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 85 ஆழ்வார்கள் போற்றிய

    திருவரங்கத்தந்தாதி 85 ஆழ்வார்கள் போற்றிய அரங்கன் அடியே அடியனுக்கு அரும் செல்வம் !


    வண்ணங்கலிவஞ்சிவெண்பாவகவல்வகைதொடுத்தோர்
    வண்ணங்கலிகெடவேண்டுமென்றேமக்கண்மாட்டுரையேன்
    வண்ணங்கலிகடல்போல்வானரங்கன்வகுளச்செல்வன்
    வண்ணங்கலியன்புகழ்தாளெனக்கென்றுமாநிதியே

    பதவுரை : வண்ணம் + கலி (அழகிய கலிப்பா)
    வண்ணம் + கலி (வழியில் வறுமை )
    வண்ணம் + கலி (நிறம் ஒலி )
    வள் + நம் + கலியன்

    ஓர் வண்ணம் ஏதோ ஓர் வழியில்
    கலி கெட வேண்டும் என்றே வறுமை ஒழிய வேண்டும் என்றே கருதி
    மக்கள் மாட்டு மனிதர்களிடம்
    வண்ணம் கலி அழகிய கலிப்பாவும் ,
    வஞ்சி வெண்பா வஞ்சிப்பாவும் , வெண்பாவும்
    அகவல் வகை ஆசிரியப்பா முதலிய செய்யுள்களை
    தொகுத்து உரையேன் புனைந்து கவி பாட மாட்டேன் ;
    வண்ணம் கலி கடல் போல்வான் ஒலிக்கின்ற கடல் போல் மேனி நிறம் கொண்ட
    வகுளம் செல்வன் மகிழ மலர் அணிந்த நம்மாழ்வார் முதல் ,
    நம் கலியன் புகழ்நமது திரு மங்கை ஆழ்வார் வரை எல்லா ஆழ்வார்களும் போற்றிய ,
    அரங்கன் தாள் ரங்கநாதனுடைய திருவடிகளே
    எனக்கு என்றும் மா நிதிஅடியேனுக்கு எப்போதும் பெரிய செல்வம் !

    Last edited by sridharv1946; 15-07-13, 19:43.
Working...
X