Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 83 கல்லார் பத தீர்த்தம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 83 கல்லார் பத தீர்த்தம

    திருவரங்கத்தந்தாதி 83 கல்லார் பத தீர்த்தம் கொள்ளாது கங்கை ஆடுவார் !

    அரும்பாகவதரிக்கும்பெயராய்ப்புள்ளரசினுக்கோர்
    அரும்பாகவதரந்துப்பனையாயரங்காவெனவுண்-
    அரும்பாகவதர்பததீர்த்தம்கொள்ளாதடிகள்கொப்புள்
    அரும்பாகவதர்தொலைப்பார்கல்லார்கங்கையாடுதற்கே

    பதவுரை : அரும் + பாகு + அவதரிக்கும்
    அரும் + பாக +அதரம்
    ணரும் + பாகவதர்
    அரும்பு + ஆக + அதர்

    கல்லார் அறிவில்லாதவர்கள்
    அரும் பாகு அவதரிக்கும் பெயராய் இனிய பாகு போல் இனிக்கும் பெயரை உடையவனே !
    புள் அரசினுக்கு ஓர் அரும் பாகா கருடனுக்கு ஒப்பற்ற பாகனே !
    அதரம் துப்பு அனையாய் இதழ்கள் பவழம் போல் சிவந்தவனே !
    அரங்கா ரங்கநாதனே !
    என உணரும் என்று துதிக்கின்ற
    பாகவதர் பக்தர்களுடைய
    பததீர்த்தம் கொள்ளாது ஸ்ரீ பாத தீர்த்தத்தை உட்கொள்ளாமல்
    கங்கை ஆடுதற்கு கங்கையில் நீராடுவதற்கு
    அடிகள் கொப்புள் அரும்பு ஆக கால்களில் கொப்புளங்கள் தோன்றும்படி
    அதர் தொலைப்பார் கஷ்டப்பட்டு நடந்து செல்வார்கள்

Working...
X