Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 81 சங்கத்து அமரர் சங்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 81 சங்கத்து அமரர் சங்க

    திருவரங்கத்தந்தாதி 81 சங்கத்து அமரர் சங்கத்து அமர சங்கத் தமரனே சரண் !

    சங்கத்தமரர்குழாத்தொடுமூழ்வினைதான்விலங்கச்-
    சங்கத்தமரன்பராயிருப்பீர்கடறானவர்தே -
    சங்கத்தமரம்படவெய்தசார்ங்கத்தனுவரங்கன்
    சங்கத்தமரன்சரணேசரணென்றுதாழ்ந்திருமே


    பதவுரை : சங்கத்து + அமரர் (பற்றுடைய நித்யர்)
    சங்கத்து + அமர் (கூட்டத்தில் இருக்கும் )
    தேசம் + கத்த + மரம்
    சங்க + தமரன்

    கடல் சமுத்திரமும்
    தானவர் தேசம் அசுரர்களுடைய நாடும்
    கத்த தவித்துக் கதறும்படியும்
    மரம் பட ஏழு மராமரங்கள் அழியவும்
    எய்த (ராமனாக)அம்பு எய்தவனும் ,
    சார்ங்கத் தனு சார்ங்கம் என்னும் வில்லை உடையவனும்
    சங்கத் தமரன் பாஞ்சஜன்யம் எனும் சங்கத்தை முழங்குபவனுமான

    அரங்கன் ரங்கநாதனுடைய
    சரணே சரண் என்று திருவடிகளே பாதுகாக்கும் என்று நம்பி
    தாழ்ந்திரும் அத்திருவடிகளை வணங்கி இருங்கள்
    ஊழ்வினை தான் விலங்க உங்கள் கருமம் முழுதும் தொலைய
    சங்கத்து அமரர் குழாத்தொடும் பக்தி உடைய நித்ய சூரிகள் கூட்டத்தில்
    சங்கத்து அமர் அவர்களுடன் இருக்கும்
    அன்பர் ஆய் முக்தர்களாக ஆகி
    இருப்பீர் வைகுண்டத்தில் வாழ்ந்து இருப்பீர் .
    Last edited by sridharv1946; 14-07-13, 13:40.
Working...
X