Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 80 குந்தம் ஏறி, குந்தமĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 80 குந்தம் ஏறி, குந்தமĮ

    திருவரங்கத்தந்தாதி 80 குந்தம் ஏறி, குந்தம் ஏந்திய முகுந்தன் துன்பம் தவிர்ப்பான் !




    சாகைக்குந்தத்துத்துகிறூக்கி மாதர்தமைநகைத்தாய்
    சாகைக்குந்தத்துவங்கட்குமெட்டாய்தண்புனலரங்கே-
    சாகைக்குந்தத்துப்படையாழியேந்தறமர்கள்வெய்யோர்
    சாகைக்குந்தத்து த்தவிர்கைக்கும்போலுமுன்சங்கற்பமே



    பதவுரை : சாகை + குந்தத்து
    சாகைக்கும் + தத்துவங்கட்கும்
    அரங்கேசா +கை + குந்தத்து
    சாகைக்கும் + தத்து

    சாகைக் குந்தத்து குருந்த மரத்தின் கிளைகளில்
    துகில் தூக்கி சேலைகளை எடுத்துச் சென்று
    மாதர் தமை நகைத்தாய் அந்த கோபியர்களை கேலி செய்தாய் !
    சாகைக்கும் வேதங்களுக்கும்
    தத்துவங்கட்கும் எட்டாய் தத்துவங்களுக்கும் எட்டாதவனே !
    தண் புனல் அரங்கேசா குளிர்ந்த காவிரி நீர் சூழ்ந்த ஸ்ரீரங்த்துக்கு தலைவனே !
    குந்தத்து குந்தம் எனும் ஆயுதத்தையும்
    படை ஆழி சக்கரப் படையையும்
    கை ஏந்தல் கைகளில் தரித்திருப்பது
    தமர்கள் தத்து தவிர்கைக்கும் பக்தர்களுடைய துன்பத்தை நீக்குவதற்கும்
    வெய்யோர் சாகைக்கும் தீயவர்களை அழிப்பதற்கும்
    உன் சங்கற்பம் போலும் நீ கொண்ட கருத்து போலும் !
Working...
X