Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 70 அரங்கன் அடிமலர் அவĪ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 70 அரங்கன் அடிமலர் அவĪ

    திருவரங்கத்தந்தாதி 70 அரங்கன் அடிமலர் அவனிக்குப் பாய் மரம் !

    காமனத்தால்விழவூதியக்காவைக்கவரரங்கன்
    காமனத்தாவென்றுநைவார்க்கமுதன்கன்னெஞ்சார்க்கிரங்-
    காமனத்தாநளைக்குங்கலற்பார்கலம்போன்றதுமீ -
    காமனத்தாமரையோன்கங்கைபாய்மரங்கான்மலரே




    பதவுரை : கா + மன் + நத்தால்
    காமன் + அத்தா
    இரங்கா + மனத்தான்
    மீகாமன் + அ + தாமரையோன்


    கா மன் கற்பகச்சோலையின் தலைவனான இந்திரன்
    நத்தால் விழ ஊதி பாஞ்சஜன்யத்தின் ஓசையால் மயங்கி விழும்படி ஊதி
    அக்காவைக் கவர் அங்கிருந்த பாரிஜாத மரத்தைத் திருடி வந்தவனும் ,
    காமன் அத்தா என்று "மன்மதன் தந்தையே" என்று
    நைவார்க்கு உருகி வேண்டும் பக்தர்களுக்கு
    அமுதன் அமுதம் போல் இனியவன் ஆனவனும் ,
    கல் நெஞ்சர்க்கு கல்லைப் போல் கடினமான மனத்தவர்க்கு
    இரங்கா மனத்தான் கருணை காட்டாதவனுமான
    அரங்கன் ரங்கநாதன்
    அளக்கும் (த்ரிவிக்ரமாவதாரத்தில்) அளந்த
    கடல் பார் கடல் சூழ்ந்தபூமி
    கலம் போன்றது கப்பல் போன்றது ;
    அத் தாமரையோன் தாமரையில் இருக்கும் பிரம்மா
    மீகாமன் (கப்பலுடைய) மாலுமி போன்றவன் ;
    கால் மலர் (த்ரிவிக்ரமனின்) திருவடித் தாமரை
    மரம் (கப்பலுடைய) பாய்மரம் போன்றது ;
    கங்கை (திருவடியிலிருந்து பெருகிய ) கங்கா நதி
    பாய் பாய் போன்றது .


    Last edited by sridharv1946; 11-07-13, 13:37.
Working...
X