திருவரங்கத்தந்தாதி 68 அரங்கா ! நின் அற்புதம் அயனும் அறியான் !
கற்றினமாயவைகாளையர்வான்கண்டுமீனிவ
கற்றினமாயமுநீகன்றுகாளையராகிப்பல்ப-
கற்றினமாயர்பரிவுறச்சேரிகலந்தமையுங்-
கற்றினமாயவொண்ணாவரங்காசெங்கமலற்குமே

பதவுரை : கற்று + இனம் + ஆயவை
அகற்றின + மாயம்
பகல் + தினம் + ஆயர்
கற்று + இனம் + ஆய
அரங்கா ரங்கநாதா !
கற்றினம் ஆயவை கன்றுகளின் கூட்டமும்
காளையர் இடையப் பிள்ளைகளும்
வான் கண்டு வானத்தை அடைந்து
மீள் நினைவு அகற்றின மீண்ட ஞாபகத்தை ஒழித்த
மாயமும் அற்புதமும்
நீ கிருஷ்ணனான நீ
கன்று காளையர் ஆகி கன்றுகளாகவும் சிறுவர்களாகவும் மாறி
பல் பகல் பல நாட்களாக
தினம் நாள் தோறும்
ஆயர் பரிவு உற இடையர்கள் அன்பு மிகுமாறு
சேரி கலந்தமையும் இடைச்சேரியில் சேர்ந்து வந்த விசித்திரமும்
செம் கமலற்கும் சிவந்த தாமரையில் இருக்கும் பிரம்மாவிற்கும்
இனம் இன்னமும்
கற்று ஆய ஒண்ணா ஆராய்ந்து அறிய முடியாது !