Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 65 புலவீர் ! அரங்கனைப் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 65 புலவீர் ! அரங்கனைப் 

    திருவரங்கத்தந்தாதி 66 புலவீர் ! அரங்கனைப் புகழ்மின் !

    ஆசுகவிக்குநிகரெனக்கில்லையென்றற்பரைப்பூ
    ஆசுகவிக்குவில்வேல்வடிவாவறிவாலகத்திய்
    ஆசுகவிக்குவலயமன்னாவென்றுஅரற்றியிரந்து
    ஆசுகவிக்கும்புலவீர்புகழ்மினரங்கனையே

    பதவுரை :

    ஆசுகவிக்கு விரைவில் பாடும் கவி இயற்றுவதில்
    எனக்கு நிகர் இல்லை எனக்கு சமமாக யாரும் இல்லை
    என்று என்று காட்டுவதற்காக
    அற்பரை புல்லர்கள் பலரை
    பூ ஆசுக "மலர்களாலான அம்பையும்
    இக்கு வில் கரும்பாலான வில்லையும் உடைய
    வேள் வடிவா மன்மதன் போல் அழகியவனே !
    அறிவால் அகத்தியா சுகா ஞானத்தில் அகத்தியரையும் சுகரையும் போன்றவனே !
    இக்குவலய மன்னா பூமியின் அரசனே !"
    என்று அரற்றி என்று புகழ்ந்து பிதற்றிப் பாடி
    இரந்து உணவு உடை பிச்சை வாங்கி
    ஆசு கவிக்கும் தவறாக ப்பாடும்
    புலவீர் புலவர்களே !
    அரங்கனை புகழ்மின் ரங்கநாதனைப் புகழ்ந்து பாடுங்களேன் !




    --
    Last edited by sridharv1946; 09-07-13, 21:09.
Working...
X