திருவரங்கத்தந்தாதி 62 வைகுந்தர் வடிவு ஐந்திலும் வாழ்கிறார் !
வைகுந்தர்தாமரைபோற்பாதர்நாகத்துமாதர்புடை
வைகுந்தமேற்கொண்டிருந்தோர்வடிவைந்தின்வாழுமிடம்
வைகுந்தம்பாற்கடன்மாநீரயோத்திவண்பூந்துரை
வைகுந்தமன்பர்மனன்சீரரங்கம்வடமலையே
பதவுரை : வை +குந்தர்
வைகுந்தம்
வைகும் +தம்
வை குந்தர் கூர்மையான குந்தம் என்னும் ஆயுதத்தை உடையவரும் ,
தாமரை போல் பாதர் தாமரை போன்ற திருவடிகள் உடையவரும் ,
நாகத்து புன்னை மரத்தின் மேலும்
குந்தம் மேல் குந்த மரத்தின் மேலும்
மாதர் புடைவை கோபியர்களுடைய சேலைகளை
கொண்டு இருந்தோர் கவர்ந்து கொண்டு ஏறி இருந்த திருமால்
வடிவு ஐந்தின் ஐந்து உருவங்களோடு
வாழுமிடம் இருக்கும் இடங்களாவன :
வைகுந்தம் பரமபதம் (பரம்) ,
பாற்கடல் பாற்கடல் (வ்யூஹம் ) ,
மா நீர் அயோத்தி நீர் வளமுள்ள அயோத்யா (விபவம்) ,
வள் பூ துவரை வளமை கொண்ட துவாரகை (விபவம்) ,
வைகும் தம் அன்பர் மனம் நிலையான பக்தர்களது மனம் (அந்தர்யாமி) ,
சீர் அரங்கம் ஸ்ரீரங்கம் (அர்ச்சை) ,
வடமலை திரு வேங்கட மலை (அர்ச்சை).