திருவரங்கத்தந்தாதி 59 கண்ணன் மீது கரந்த காதலை கன்னியரிடம் கூறேன் !
மகரந்தகாதலைவாழ்வென்னவாரிசுட்டாய்திதிதன்
மகரந்தகாதலைவானிலுள்ளோர்க்குமண்ணோர்க்குவட்டா
மகரந்தகாதலைவார்குழையாய்வளர்சீரங்கதா
மகரந்தகாதலைவாக்கிற்சொல்லேன்மடவாரெதிரே
பதவுரை :மகரம் + தகாது
மகர் + அந்தகா
மகரந்த + காது
மகரம் சுறா மீன்களும்
அலை வாழ்வு தகாது என்ன கடலில் வாழ்வது கூடாது என்று சொல்லும்படி
வாரி சுட்டாய் கடலை எரிக்க ஆரம்பித்தவனே !
திதி தன் மகர் அந்தகா திதியின் புதல்வர்களான அரக்கர்களுக்கு யமனான வனே !
வானில் உள்ளோர்க்கு தலை தேவர்களுக்குத் தலைவனே !
மண்ணோர்க்கு உவட்டா மகரந்த மனிதர்களுக்கு தெவிட்டாத தேனே !
காத்து அலை வார் குழையாய் காதுகளில் ஆடும் குண்டலங்களை உடையவனே !
வளர் சீரங்க தாம ஸ்ரீ ரங்கத்தில் உறங்குபவனே !
கரந்த காதலை எனது அந்தரங்கமான பக்தியை
மடவார் எதிரே பெண்களிடம்
வாக்கில் சொல்லேன் என் வாயால் சொல்ல மாட்டேன் !