Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 44 அரங்கர் திருக்கை கĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 44 அரங்கர் திருக்கை கĩ

    திருவரங்கத்தந்தாதி 44 அரங்கர் திருக்கை கண்டே அகிலமும் அடங்கும் !

    தினகரனார்கலிதீகாற்றொடுங்குஞ்செயலும்விண்மீ-
    தினகரனார்கொண்டலேழ்செருக்காமையுஞ்சென்றெதிர்மோ-
    தினகரனாருயிர்செற்றாரரங்கர்திகிரிசங்கேந்-
    தினகரனார்நம்பெருமாளமைத்ததிருக்கைகண்டே

    பதவுரை :

    தினகரன் சூரியன்,
    ஆர்கலி ஓசை உடைய கடல் ,
    தீ அக்கினி,
    காற்று வாயு இவை எல்லாம்
    ஒடுங்கும் செயலும் அடங்கி செயல் படுவதும்
    விண் மீதில் நகரனார் வானத்தில் அமராவதி நகரை ஆளும் இந்திரனுடைய
    கொண்டால் ஏழும் ஏழு மேகங்களும்
    செருக்காமையும் அதிகமாய் பொழிந்து உலகங்களை அழிக்காமல் இருப்பதும்
    சென்று எதிர் மோதின எதிரே வந்து போரிட்ட
    கரன் ஆருயிர் கரனுடைய அருமையான உயிரை
    செற்றாரும் அழித்தவரும் ,
    திகிரி சங்கு ஏந்தின சங்கு சக்கரம் தரித்த
    கரனார் திருக் கைகளை உடையவரும் ,
    நம்பெருமாள் நம் பெருமாள் என்று பெயர் பெற்றவருமான ,
    அரங்கர் ரங்கநாதருடைய
    அமைத்த திருக்கை கண்டே அபய ஹஸ்தமான கைகளைப் பார்த்தே
    Last edited by sridharv1946; 01-07-13, 20:07.
Working...
X