திருவரங்கத்தந்தாதி 41 அரும்பாடு பட்டாலும் அரங்கனைக் கண்டு வாழுங்கள் !
கலக்கூழைக்கைக்குங்கருத்துடையீரரங்ககத்துளிலைக்-
கலக்கூழைக்கைக்குங்கறியிட்டுந்துய்த்திருங்காதுபடைக்-
கலக்கூழைக்கைக்குள்வருவாணனைக்கண்ணுதலும்விட்ட-
கலக்கூழைக்கைக்குப்பைகண்டானைவீதியிற்கண்டுவந்தே.
பதவுரை :
கலக்கு ஊழை கலங்கவைக்கும் ஊழ்வினையை
கைக்கும் வெறுத்து ,ஒழிக்கவேண்டும் என்னும்
கருத்து உடையீர் எண்ணம் உடையவர்களே !
காது படைக்கலம் மோதவல்ல ஆயுதங்களை உடைய
கூழை கைக்குள் படை வகுப்பின் ஒழுங்கினிடையே
வரு வாணனை வந்த பாணாசுரனை
கண்ணுதலும் அகல சிவபிரானும் கை விட்டு விலக ,
கூழை கை குறைபட்ட கைகளின்
குப்பை கண்டானை - குவியலைக் கண்டவனான ரங்கநாதனை
அரங்கத்துள் ஸ்ரீரங்கத்தில்
வீதியில் கண்டு வீதியில் பார்த்து
உவந்து மனம் மகிழ்ந்து
இலை கலம் இலைப்பாத்திரத்தில்
கூழை கூழை
கைக்கும் கறி இட்டு கசக்கின்ற கறிகளுடன் சேர்த்து
துய்த்து சாப்பிட்டாவது
இரும் வசித்திடுங்கள் !