Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 39 வில் இட ராகவன் இதயதĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 39 வில் இட ராகவன் இதயதĮ

    திருவரங்கத்தந்தாதி 39 வில் இட ராகவன் இதயத்தன் ஆனால் இடராக எது வரும் ?

    இடராகவந்தென்னைப்புன்சிறுதெய்வங்களென்செயுமான்-
    இடராகவன்பிணிமாநாகமென்செயும்யான்வெருவி-
    இடராகவன்னிபுனலிடிகோண்மற்றுமென்செயும்வில்
    இடராகவன்னரங்கன்றிருத்தாளென்னிதயத்ததே

    பதவுரை :


    வில் இட ராகவன் வில்லை இடக்கையில் கொண்ட ராமனான
    அரங்கன் திருத்தாள் ரங்கநாதனது திருவடி
    என் இதயத்தது அடியேன் மனத்தில் உள்ளது. (ஆதலால் )
    புன் சிறு தெய்வங்கள் இழிந்த அற்ப தேவதைகள்
    என்னை அடியேனை
    இடராக வந்து துன்பம் கொடுக்க நெருங்கி வந்து
    என் செயும் என்ன செய்ய முடியும் ?
    மானிடர் ஆக மனித சரீரத்தை வருத்தும்
    வன் பிணி கொடுமையான நோய்களாகிய
    மா நாகம் பெரிய பாம்புகள்
    என் செயும் என்ன செய்ய முடியும் ?
    ராக வன்னி செந்நிறம் கொண்ட தீ,
    புனல்,இடி,கோள் நீர்,இடி, நவ கிரஹங்களும்,
    மற்றும் இன்னும் தீங்கு விளைவிப்பவைகளும்
    யான் வெருவிட நான் அஞ்சும்படி
    என் செயும் என்ன செய்ய முடியும் ?

    Last edited by sridharv1946; 27-06-13, 11:35.
Working...
X